தோனி தான் ஃபர்ஸ்ட், லைஃப் பார்ட்னர் நெக்ஸ்ட்: ரசிகை அதிரடி!

  Newstm Desk   | Last Modified : 21 Apr, 2018 07:20 pm


சென்னையில் இருந்து ஐ.பி.எல் போட்டிகள் மாற்றம் செய்ததால், புனேவில் நேற்றைய சி.எஸ்.கே அணியின் ஆட்டம் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சி.எஸ்.கே துவம்சம் செய்து மூன்றாவது வெற்றி பெற்றது. இந்த போட்டியை ரசிக்க ஆயிரம் ரசிகர்கள் சென்னையில் இருந்து புனேவுக்கு புறப்பட்டுச் சென்றனர். ஒட்டுமொத்த கூட்டமும் சி.எஸ்.கே-வுக்காக விசில் போட்டது.

சி.எஸ்.கே என்ற அணிக்காக மட்டுமின்றி தல என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கும் தோனிக்காகவும் இந்த கூட்டம் ஒன்று சேர்ந்தது. தமிழகம் மட்டுமின்றி உலகளவிலும் தோனிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அப்படி தோனிக்காக உருகும் ரசிகர்கள் மத்தியில் நேற்றைய மைதானத்திலும் ஒரு பெண் தோனி ரசிகர், இப்படியும் ஒரு ரசிகையா? என்று நம்மை ஈர்க்கவைத்தார்.


மைதானத்தில் அவர் எழுதி வைத்து பறக்கவிட்ட பேனர் புகைப்படம் தான் சமூகவலைத்தளத்தில் டாப் டாபிக்காக பகிரப்பட்டு வருகிறது. அதில் அவர், "வருங்கால கணவரே என்னை மன்னித்து விடுங்கள்.. எப்போதும் என்னுடைய முதல் காதல் தோனி தான். ஐ லவ் யு மஹி" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பேனர் மூலம் தான் ஒரு தீவிர ரசிகை என்று அந்த பெண் அனைவருக்கும் உணர்த்தினார். இதை தோனி பார்த்தாரா என்று தெரியவில்லை. அப்படி பார்த்தால் அவருடைய ரியாக்ஷன் என்னவாக  இருக்கும் என்பதில் அனைவரும் தெரிந்துக் கொள்ள ஆர்வமாக தான் இருப்பர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close