இவர் உலகின் சிறந்த வீரர் என்பதில் சந்தேகமே இல்லை: விராட் கோலி

  Newstm Desk   | Last Modified : 22 Apr, 2018 10:04 am

ஏ.பி.டிவில்லியர்ஸ் உலகின் சிறந்த வீரர் என்பதில் எந்த சந்தேகமும் என்று விராட் கோலி நேற்றைய வெற்றிக்கு பின் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய போட்டியில் பெங்களுரு மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். 

டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய், கவுதம் காம்பீர் ஆகியோர் களமிறங்கினர். ராய் 5 ரன்னிலும், காம்பீர் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். அரைசதம் அடித்த ஷ்ரேயாஸ் அய்யர் 52 ரன்னில் ஆட்டமிழந்தார். 

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த் அரைசதம் கடந்தார். அவர் 48 பந்தில் 85 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.  டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. பெங்களூர் அணியின் பந்துவீச்சில் சஹால் 2 விக்கெட் வீழ்த்தினார். 

இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்கார வோரா 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். நிதானமாக விளையாடி வந்த டி காக் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார்.

அதைத்தொடர்ந்து கோலியுடன், டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். தொடக்கம் முதலே டி வில்லியர்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிகாட்டினார். கோலி 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய டி வில்லியர்ஸ் 23 பந்தில் அரைசதம் அடித்தார். அதன்பின் களமிறங்கிய கோரி ஆண்டர்சன் 15 ரன்னில் ஆட்டமிழந்தார்.

பெங்களூரு அணி 18 ஓவரில் 177 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி வில்லியர்ஸ் 90 ரன்களுடனும், மந்தீப் சிங் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

வெற்றிக்கு பின் பேசிய விராட் கோலி: கடைசி போட்டியில் நான் எடுத்த 90 ரன்களை விட இன்று எடுத்த 30 ரன்களை சிறந்ததாக கருதுகிறேன். டிவில்லியர்ஸ் இன்று நாங்கள் சிரிக்க பல காரணங்களை கொடுத்தார். அவர் தொடக்கமே அருமையாக இருந்தது. அந்நிலையில் நான் அவருடன் பார்டனர்ஷிப் கொடுக்க வேண்டும் என்ற தான் நினைத்தேன். அப்போது தான் எதிரணியினர் வெற்றிப்பெற வேண்டும் என்பதை மறந்து ஆட்டத்தை காப்பற்ற வேண்டும் என்று நினைப்பர். நான் கடைசி வரை விளையாடாதது வருத்தம் தான். ஆனால் எனக்கு பின் வந்த கோரி ஆண்டர்சன் மற்றும் மந்தீப் சிங் நிதானமாக விளையாடினர். ஒரு பக்கத்தில் டிவில்லியர்ஸ் ஆட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றார். அவர் உலகின் தலைசிறந்த வீரர் என்பதில் சந்தேகமே இல்லை. 

எனது விக்கெட் போன போது போல்ட் பிடித்த கேட்ச் மிக சிறப்பானது. இது ஐபிஎல்லில் அடிக்கடி நடக்க கூடியது. இதனை பின்னர் ஒரு நாள் பார்க்கும் போது இதுபோன்ற சிறந்த கேட்ச்சால் விக்கெட்டை இழந்ததால் வருத்ததை ஏற்படுத்தாது. 

ஒரு அணியாக நாம் நம்பிக்கையுடன் இருந்தால் தான் ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்க முடியும். ரசிகர்களின் பாசிடிவ்வான என்ர்ஜி எங்களுக்கு தேவை என்றார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close