கோலியின் விக்கெட்டை பறித்த 'அந்த' கேட்ச்: ஆச்சர்யத்தில் கிரிக்கெட் உலகம்

  Newstm Desk   | Last Modified : 22 Apr, 2018 10:32 am

பெங்களூருவில் நடந்த ஆர்சிபி மற்றும் டெல்லி இடையிலான போட்டியில் போல்ட் பிடித்த கேட்சிற்கு கிரிக்கெட் உலகம் பாராட்டு தெரிவித்து வருகிறது. 

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதின. இந்த போட்டியில் விராட் கோலி பவுண்டரி லைனுக்கு விளாசிய பந்தை டெல்லி அணியின் டிரென்ட் போல்ட் அபாரமாக பிடித்தார். அதை பார்த்து விராட் கோலி இது எப்படி சாத்தியம் என்பது போல ஆச்சர்யமாக பார்த்தார். அந்த அளவுக்கு இருந்தது போல்ட்டின் கேட்ச். கேட்ச்சை பார்த்த வர்ணனையாளர்கள் 'டிரென்ட் போல்ட், என்ன செய்கிறீர்கள்? இதுதான் ஐபிஎல்லில் நாங்கள் பார்த்த சிறந்த கேட்ச்' என்று ஆச்சர்யம் அடைந்தனர். 

கேட்ச்சை பிடித்த டிரென்ட் கூட ஒரு நொடி ஆச்சர்யம் அடைந்தார் என்று தான் சொல்ல வேண்டும். 

இதுகுறித்து ஆட்டத்திற்கு பின் விராட் கூறும்போது, நான் அந்த கேட்சை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து விட்டேன். இது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் தான் நடக்கும். இதுபோன்ற கேட்ச்சில் விக்கெட்டை இழப்பது வருத்தம் அளிக்காது என்று தெரிவித்தார்.

மேலும் டெல்லி அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் கூறும்போது, நான் பார்த்ததில் சிறந்த கேட்ச் இது தான் என்றார். 

இந்நிலையில் டிரென்டுக்கு கிரிக்கெட் உலகத்தினர் பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த கேட்ச்சை பார்க்க:- இங்கு க்ளிக் பண்ணுங்க

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close