தம் பிரியாணி சாப்பிட வரல... தம் பிடிச்சி விளையாட வந்தோம் - ஹர்பஜன் கலக்கல்

  ஐஸ்வர்யா   | Last Modified : 23 Apr, 2018 11:34 am


சென்னை சூப்பர் கிங்ஸ் அதிரடியான தொடர் வெற்றிகளை கொண்டாடும் வகையில் ஹர்பஜன் தமிழில் ட்வீட் பதிவிட்டுள்ளார்.

ஹைதராபாத்தில் களைகட்டிய ஐ.பி.ல் தொடரின் 20வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அம்பத்தி ராயுடு, ரெய்னா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான ஷேன் வாட்சன் 9 ரன்களிலும், பாப் டூ பிளஸ்ஸி 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 3‌7 பந்துகளில் 79 ரன்கள் விளாசி ராயுடு விக்கெட்டை இழந்தார். ரெய்னா 43 பந்துகளில் 53 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் தோனி தன்பங்கிற்கு 12 பந்துகளில் 25 ரன்கள் விளாசினார்.

183 ரன்கள் என்ற வெற்றி இ‌லக்குடன் விளையாடிய ஹைதராபாத் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. கடைசி கட்டத்தில் ரஷித் கானின் அதிரடி ஆட்டத்தால், கடைசி பந்தில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஹைதராபாத் அணிக்கு ஏற்பட்டது. அந்த பந்தை சிறப்பாக வீசிய பிராவோ ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுக்க சென்னை அணி 4 ரன் வித்தியாசத்தில் வென்றது. 4 ஆவது வெற்றியை ஈட்டிய சென்னை அணி 8 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியது. ஆட்டநாயகனாக அம்பாத்தி ராயுடு தேர்வு செய்யப்பட்டார். 


இந்நிலையில் அவ்வப்போது ட்விட்டரில் தமிழில் ட்வீட் செய்து ரசிகர்களை உற்சாகப்படுதும் ஹர்பஜன் சிங் சென்னையில் அதிரடி வெற்றி தொடர்பாக “வீழ்த்திவிடலாம் என்று நினைத்தாயோ. சூதுவாது தெரியாம சென்னை கிட்டயே ச்சலம்பலா. இங்க ஃபேமஸ் தம் பிரியாணி சாப்புட வரல தம் பிடிச்சி வெளயாட வந்தோம். சாலா பாஹ உந்தி சஹார் சிரக தீஸ்தாவுறா ஒப்பனிங் ல இறக்குவோம் அம்பத்தி ராயுடுவ. பௌலர்க்கு எல்லாம் டெரர் ஆய்டும் அருமை சன்ரைசர்ஸ்” என்று பதிவிட்டுள்ளார்.

இதை சி.எஸ்.கே ரசிகர்கள் ரீட்வீட் செய்து வருகின்றனர். ஐ.பி.எல் இந்த சீசன் முடிவதற்குள் முழு சென்னைவாசியாகவே ஹர்பஜன் சிங் மாறிவிடுவார் போல...

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close