2019க்கு பின் ஓய்வு முடிவு- யுவ்ராஜ் சிங் திட்டவட்டம்

  Newstm Desk   | Last Modified : 23 Apr, 2018 12:03 pm


2019 உலக கோப்பைக்கு பின் தனது ஓய்வு முடிவு குறித்து அறிவிப்பேன் என்று இந்தியாவின் முன்னணி வீரர் யுவ்ராஜ் சிங் தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டராக திகழ்ந்தவர் யுவ்ராஜ் சிங். இந்திய அணிக்காக பல வெற்றிகளை பெற்று தந்ததில் முக்கிய பங்களிப்பை இவர் தந்திருக்கிறார். இருப்பினும் இந்திய அணியில் இருந்து ஓரங்கபட்டப்பட்டு வருகிறார். கடைசியாக இந்திய ஒருநாள் அணிக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் விளையாடியிருந்தார். இந்திய அணியில் 18 ஆண்டுகளாக விளையாடி வரும் யுவ்ராஜ் தனது ஓய்வு முடிவு குறித்து பேசினார். 

அவர் கூறுகையில், "2019ம் ஆண்டு வரை நான் விளையாட விரும்புகிறேன். அதன் பிறகு எனது ஓய்வ முடிவு குறித்து அறிவிப்பேன். அனைவரும் ஒரு நாள் இந்த முடிவை எடுக்க தான் வேண்டும். 2000ம் ஆண்டு முதல் நான் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறேன். 17-18 வருடங்கள் ஆகிவிட்டன. அதனால் நிச்சயம் 2019க்கு பிறகு இது குறித்து முடிவு செய்வேன்"  என்றார்.

ஐ.பி.எல் குறித்து பேசுகையில், "நாங்கள் முதலில் தகுதிச் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்பதே இலக்கு. இந்த ஆண்டு எங்களுக்கு சிறந்த அணி கிடைத்திருக்கிறது. எங்களுடைய பேட்டிங் வலிமையாகவும், பந்துவீச்சு ஸ்மார்ட்டாகவும் உள்ளது. இதனால் நாங்கள் நம்பிக்கையுடன் தகுதிச் சுற்றி எதிர்நோக்கி உள்ளோம். அதன் பின் பைனலை பார்த்துக் கொள்வோம்" என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close