போதைப்பொருள் கடத்திய வங்கதேச கிரிக்கெட் வீராங்கனை கைது

  Newstm Desk   | Last Modified : 23 Apr, 2018 01:01 pm


வங்கதேச பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை போதைப்பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

டாக்கா பிரீமியர் லீகில் முதல்தர கிரிக்கெட் போட்டியில் விளையாடுபவர் நஸ்ரின் கான் முக்தா. நேற்று இவர் போட்டி முடிந்து திரும்புகையில், சிட்டான்காங்கில் அவர் பயணம் செய்து வந்த பேருந்தை நிறுத்தி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில், முக்தாவின் பேக்கெட்டில் 14,000 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் அவரை போதைப்பொருள் கடத்திய வழக்கில் கைது செய்த போலீசார், வாழ்நாள் சிறையில் முக்தா அடைக்கப்படுவார் என்று குறிப்பிட்டனர்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து போதைப்பொருள் கடத்தல் சம்பவம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த விவகாரத்தில் தூக்கு தண்டனை வழங்கும் சட்டத்தை கொண்டுவர டாக்கா திட்டமிட்டு வருகிறது. கடந்த ஆண்டு 40,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close