தடையால் கட்டிட தொழிலாளியாக மாறிய டேவிட் வார்னர்

  Newstm Desk   | Last Modified : 23 Apr, 2018 04:01 pm


பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை பெற்ற டேவிட் வார்னர் கட்டிட தொழிலாளியாக மாறியுள்ளார். 

கடந்த மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் துணை கேப்டன் டேவிட் வார்னர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், கேப்டன் ஸ்மித் மற்றும் சக அணி வீரர் பான்கிராஃப்ட்டுடன் குற்றம் சாட்டப்பட்டார். இதில் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. பான்கிராஃப்ட்டுக்கு 9 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. 

பெரிய சர்ச்சைக்குள்ளான இந்த விஷயத்தில், தாங்கள் பெற்ற தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று மூவரும் அறிவித்தனர். பிரஸ் மீட்டில் தங்களது மன்னிப்பையும் மக்களிடமும், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடமும் கேட்டுக் கொண்டனர். 


இதனால் ஆஸ்திரேலியாவின் ஒப்பந்த பட்டியலில் இருந்தும் இவர்கள் நீக்கப்பட்டனர். தவிர, ஐ.பி.எல் போட்டியில் இருந்தும் ஸ்மித், வார்னருக்கு தடை விதித்து பிசிசிஐ நடவடிக்கை எடுத்தது. இதன் காரணமாக முன்னணி வீரர்களான இவர்கள் போட்டிகளில் பங்கேற்காமல் இருப்பது மிகப்பெரிய இழப்பாக உள்ளது.

இந்த நிலையில், கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி இருக்கும் வார்னர் தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள கட்டிட தொழிலாளியாக மாறியுள்ளார். 10 மில்லியன் டாலரில் வார்னர் சிட்னியில் ஒரு பங்களா கட்டி வருகிறார். தற்போது இந்த பங்களாவின் கட்டுமான பணிகளை வார்னரும் இணைந்து செய்து வருகிறார். வார்னரின் மனைவி கண்டிஸ் வார்னர், கட்டுமான பணிகள் செய்யும் தனது கணவர் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close