அம்மாவாகப்போகும் சானியா மிர்சா!

  ஐஸ்வர்யா   | Last Modified : 23 Apr, 2018 07:27 pm


பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, தான் கர்ப்பமாக உள்ளதாக உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

டென்னிஸில் 6 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற புகழ்பெற்ற இந்திய வீராங்னையான சானியா மிர்சாவுக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருமான சோயிப் மாலிக்கும் காதல் திருமணம் நடைபெற்றது. 2003ம் ஆண்டு முதல், 2012ம் ஆண்டு ஒற்றையர் போட்டியில் இருந்து ஓய்வுபெறும் வரை, நாட்டின் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக கருதப்பட்டார் சானியா. 


டென்னிஸ் அரங்கை அதிரவைத்த சானியா, தான் விரைவில் தாயாகவுள்ளதாக ஒரு புகைப்படம் மூலம், மறைமுகமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சானியா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'பேபி மிர்சாமாலிக்' என பதிவிட்டு ஆடைகளால் ஆன புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதே புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். திரைத்துறை மற்றும் விளையாட்டு பிரபலங்கள், சானியா ரசிகர்கள் என பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சானியாவின் கணவர் சோயிப் மாலிக்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் ’மிர்சாமாலிக்’ என அதே படத்தை பதிவிட்டுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close