பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு நன்றி கூறிய சச்சின்

  Newstm Desk   | Last Modified : 25 Apr, 2018 12:02 am

தனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கூறிய ரசிகர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் வீடியோ மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் ஜாம்பவன் சச்சின் டெண்டுல்கர் நேற்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு நள்ளிரவு முதலே கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துக்களை சொல்ல ஆரம்பித்துவிட்டனர். சமூக வலைதளத்தில் இன்று சச்சினின் பிறந்தநாள் தான் டிரெண்டிங். இந்நிலையில் சச்சின் தனக்கு வாழ்த்துக் கூறியவர்களுக்கு வீடியோ மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.


அந்த வீடியோவில், எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. நேற்று இரவில் இருந்து எனக்கு நிறைய குறுஞ்செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது. அனைத்திற்கும் மிக்க நன்றி என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வீடியோவுடன், நீங்கள் எனக்கு காட்டிய அன்புக்கெல்லாம் நன்றி மட்டும் போதாது என்று பதிவிட்டு இருந்தார். அவரது ரசிகர்கள் இந்த வீடியோவையும் வைரலாக்கி வருகின்றனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close