உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்

  Newstm Desk   | Last Modified : 25 Apr, 2018 11:21 am


தென் கொரியாவின் சாங்வான் நகரில் கடந்த 22ம் தேதி உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தொடங்கியது. போட்டியின் முதல் இரண்டு நாட்களில் இந்திய வீரர்கள் பதக்கம் ஏதும் வெல்லாத நிலையில், மூன்றாவது நாளான நேற்று இந்திய வீரர் ஷாஹ்சார் ரிஸ்வி  பதக்கம் வென்றார். 

ஆண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர்கள் ஜித்து ராய், ஓம் பிரகாஷ் மிதர்வால், ஷாஹ்சார் ரிஸ்வி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் ஜித்து ராய், ஓம் பிரகாஷ் இறுதிச் சுற்றுக்கு கூட முன்னேறவில்லை. 

இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்த ஷாஹ்சார் ரிஸ்வி 239.8 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். 0.2 புள்ளி வித்தியாசத்தில் ரிஸ்வி, ரஷ்யாவின் ஆர்டெம் செர்னோஸோவிடம் (240.0 புள்ளிகள்) தங்கப் பதக்கத்தை தவறவிட்டார். பல்கேரியாவின் சமுயில் டாங்கோவ் (217.1 புள்ளிகள்) வெண்கலம் வென்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close