மீண்டும் ஒரே டி-ஷர்ட்டில் கலக்கும் விராட் - அனுஷ்கா

  Newstm Desk   | Last Modified : 25 Apr, 2018 12:44 pm


இந்திய கேப்டன் விராட் கோலி களத்தில் எப்படி சிறந்த நாயகனோ, அதே போல் தான் களத்துக்கு வெளியேவும் உள்ளார். கிரிக்கெட்டை தாண்டி தன்னுடைய ஸ்டைல் மற்றும் ஃபேஷனுக்காகவே அவருக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. சமீபத்தில் செல்வாக்குமிக்க மனிதர்கள் பட்டியலில் விராட் இடம் பெற்றிருந்தார். இப்படி தினமும் விராட் குறித்த ஏதாவது ஒரு செய்தியை நாம் பார்த்து ரசித்து பகிர்ந்து வருகிறோம். 

இந்த நிலையில், சமூக வலைதளத்தில் விராட் பற்றிய லேட்டஸ்ட் ட்ரெண்ட் என்னவென்றால், அவரும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா சர்மா அணிந்த ஆடை தான். இந்த நட்சத்திர ஜோடிக்கு கடந்த ஆண்டு இறுதியில் திருமணம் முடிந்தது. ஆனால் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் இந்த நட்சத்திரங்கள் ஜொலித்துக் கொண்டே தான் இருக்கிறது. 

அனுஷிமா சர்மா, விராட் போல் உடை அணிந்து உலகத்தை உலா வருவது புதிதல்ல. ஏற்கனவே அவரது ஜெர்சியை அணிந்து ரசிகர்கள் செய்யும் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தார். தற்போது அதே போல் ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. விராட், ஜிம்மில் ஒரு கறுப்பு டி-ஷர்ட் அணிந்து உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் வெளியானது. மறுப்பக்கம் அதேபோன்ற டி-ஷர்ட் அணிந்து விமான நிலையத்தில் அனுஷ்கா காணப்படும் புகைப்படமும் வெளியிடப்பட்டது. சரி, இதில் என்ன இருக்கிறது என்று கேட்காதீர்கள். இது தான் ரிலேஷன்ஷிப் கோல் என்கிறார்கள் ரசிகர்கள். 


திருமணமாகி இருவரும் அவரவர் தொழில் திசைகளை பார்த்தபடி சென்றுவிட்டனர். இதனால் அவர்கள் சேர்ந்திருக்கும் நேரம் குறைவு தான். இந்த இடைவெளியில் இருவரும் ஓவரைக்கொருவர் மிஸ் செய்கிறார்கள். இதன் காரணமாக தான் மிஸ் செய்யும் கணவரது நினைவாக அனுஷ்கா, விராட்டின் டி-ஷர்ட்டை அணிந்திருக்கிறார். இது தான் காதல் என்று ரசிகர்கள் இந்த நட்சத்திர ஜோடியை பார்த்து வியக்கின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close