நல்லாட்சி தந்தால் ஏன் போராடபோகிறோம்- சீமான் தாக்கு

  Newstm Desk   | Last Modified : 25 Apr, 2018 11:04 pm


போராட்டங்கள் நடைபெறக்கூடாது என்றால் நேர்மையான நல்லாட்சியை அரசு வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

புழல் சிறை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், பிரதமரை முதலமைச்சர் சந்திப்பதால் என்ன பலன் உள்ளது? அப்படி காவிரி விவகாரம் குறித்து ஆலோசிப்பதாக இருந்தால் பிரதமர் தமிழகம் வந்த போது காவிரி விவகாரம் குறித்து ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என கேள்வியெழுப்பினார். தமிழக அரசு போராட்டங்களை ஒடுக்குகிறது. போராட வேண்டும் என்ற எண்ணம் பொதுமக்களிடம் வர கூடாது என நினைக்கிறது. எல்லா வளத்தை சுரண்டி சோமாலியா, நைஜீரியா போல தமிழகம் மாறும் நிலை உருவாகவுள்ளது. உணவுக்கும் நீருக்குமான போராட்டம், பொழுது போக்கிற்கானது அல்ல; காவிரி உரிமையை மீட்க நடத்தப்படும் போராட்டம். போராட்டங்கள் நடைபெறக்கூடாது என்றால் போராட்டங்கள் இல்லாத நேர்மையான நல்லாட்சியை அரசு வழங்க வேண்டும் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close