மெர்சல் செய்த ராயுடு, தோனி... மீண்டும் சிஎஸ்கே சூப்பர் வெற்றி!

  SRK   | Last Modified : 26 Apr, 2018 04:10 am


பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், பெங்களூரை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை மீண்டும் அசத்தியது. 

முதலில் பேட் செய்த பெங்களூரு, 205 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய டி வில்லியர்ஸ்(68) மற்றும் டி காக்(53) அரைசதம் கண்டனர். 13 ஓவர்களில் 138 ரன்கள் எடுத்து மிகவும் வலிமையான நிலையில் இருந்தது பெங்களூரு. அப்போது டி காக் அவுட்டானார். இம்ரான் தாஹிர் வீசிய 15வது ஓவரில், டி வில்லியர்ஸ் மற்றும் கோரி ஆண்டர்சன் அடுத்தடுத்து அவுட்டாக, பெங்களூரு தடுமாறியது. அதன் பின் வந்த மந்தீப் சிங் அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் 32 ரன்கள் எடுக்க, 20 ஓவர்களில், பெங்களூரு 205 ரன்கள் எடுத்தது. 

பின்னர் களமிறங்கிய சென்னை, துவக்க வீரர் வாட்சனை 7 ரன்களிலேயே இழந்தது. ஒரு பக்கம் ராயுடு சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்க, மறுமுனையில் ரெய்னா, பில்லிங்ஸ், ஜடேஜா என அடுத்தடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர், ராயுடுவுடன் கேப்டன் தோனி ஜோடி சேர்ந்தார். நடுவில் நிதானமாக விளையாடிய இரு வீரர்களும், பின்னர் ஷாட்களை விளாசி அரைசதம் கண்டனர். 82 ரன்கள் எடுத்திருந்த போது, ராயுடு ரன் அவுட்டானார்.

இறுதி கட்டத்தை நெருங்கிய போது, சென்னைக்கு 8 பந்துகளில் 27 ரன்கள் தேவைப்பட்டது. முஹம்மது சிராஜ் வீசிய பந்தை, தோனி சிக்ஸுக்கு தள்ளினார். 19வது ஓவரின் கடைசி பந்து வீசும்போது 21 ரன்கள் தேவைப்பட, சிராஜ் 3 வைடுகள் வீசினார். கோரி ஆண்டர்சன் கையில் கடைசி ஓவரை கொடுத்தார் கோலி. 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பிராவோ பேட் செய்தார். ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு ஃபோர் அடித்து, தோனி கையில் கொடுத்தார். வழக்கம் போல, தோனி சிக்ஸர் அடித்து, 19.4 ஓவரிலேயே 207 ரன்கள் எடுத்து சென்னைக்கு வெற்றியை தேடித் தந்தார். 

34 பந்துகளில் 70 ரன்கள் அடித்த தோனி, ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியோடு, சென்னை புள்ளிகள் பட்டியலில் முதலிடம் சென்றது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close