தமிழைத் தாண்டி கன்னடத்திலும் ட்வீட்... ஹர்பஜன் அட்ராசிட்டி

  Newstm Desk   | Last Modified : 26 Apr, 2018 11:45 am


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெற்றியை ருசித்த ஹர்பஜன் சிங் வழக்கம்போல் தமிழில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 24 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் நேற்று மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங்கை தொடங்கிய பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 205 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி அதிரடியாக விளையாடி 19.4 ஓவர்கள் முடிவில் 207 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


விறுவிறுப்பான போட்டிகளும், வெற்றிகளும் ஒருபக்கம் இருக்க, பஞ்சாப்பை சேர்ந்த ஹர்பஜன் தொடர்ந்து தமிழில் ட்வீட் செய்து வருவது பலருக்கு குஷியை ஏற்படுத்திவருகிறது. போட்டி முடிந்தவுடன் ஹர்பஜனின் ட்விட்டர் பக்கத்தையே நோட்டமிடும் பல சமூகதளவாசிகளும் உள்ளனர்.

இந்நிலையில் ஹர்பஜன்சிங் நேற்றைய வெற்றிக்கு பிறகு, “வாடிவாசல் தெறந்தவங்க கிட்டயே வரிஞ்சுக்கற்றதா. யாரு திமில யாரு அடக்கப்பாக்குறது..! மூச்சுவிட்ற சத்தமே இங்க உறுமல் தான். @rcbtweets " நம் @chennaiipl மனைஹே பண்ணி குரு!! பந்தே இல்ல நீவு எஸ்ட்டு தின ஆய்த்து  பேஹ பா மகா " நீ நொறுக்கு பங்கு.. @RayuduAmbati @msdhoni #அன்பின்அடையாளம்” என்று பதிவிட்டுள்ளார்.தமிழைத் தாண்டி திராவிட மொழிகளில் ஒன்றான கன்னடத்திலும்  ஹர்பஜன் ட்வீட் செய்திருப்பது சென்னை ரசிகர்களை மேலும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close