சி.எஸ்.கே-க்கு எதிராக மெதுவான பந்துவீச்சு; விராட்டுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

  Newstm Desk   | Last Modified : 26 Apr, 2018 11:28 am


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மெதுவாக பந்துவீசியதற்காக விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. ஆட்டத்தின் பரபரப்பான கடைசி ஓவரில் சென்னை அணி, இரண்டு பால் மீதமிருந்த நிலையில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது, பெங்களூரு அணி மெதுவாக பந்துவீசியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனை அடுத்து கேப்டன் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து ஐ.பி.எல் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

ஐ.பி.எல் வெளியிட்ட அறிக்கையில், "இந்த ஐ.பி.எல் சீசனில் முதல் குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு அணி மெதுவாக பந்துவீசி இருப்பது தெரியவந்தது. ஐ.பி.எல்-ன் விதிமுறையை மீறி செயல்பட்ட குற்றத்திற்காக விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close