ஐ.பி.எல் போட்டியில் 100 விக்கெட் வீழ்த்திய ஐந்தாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார் உமேஷ் யாதவ்.
11-வது ஐ.பி.எல் சீசன் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ், ரெய்னா விக்கெட்டை வீழ்த்தி, ஐ.பி.எல்-ல் 100 விக்கெட் எடுத்த ஐந்தாவது இந்திய வேகப்பந்து வீச்சாளரானார். புவனேஸ்வர் குமார், ஆஷிஷ் நெஹ்ரா, வினய் குமார், ஜாஹீர் கான் ஆகியோர் 100 விக்கெட் எடுத்த பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் நான்கு வீரர்கள் ஆவார்கள்.
இந்த சீசனுக்கான ஏலத்தில் உமேஷ் யாதவ் ரூ.2.4 கோடி கொடுத்து பெங்களூரு அணிக்காக வாங்கப்பட்டுள்ளார். இதுவரை 2018 ஐ.பி.எல்-ல், உமேஷ் யாதவ் 9 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.