வைரலாகும் ரெய்னாவின் ட்விட்டர் பதிவு...

  கனிமொழி   | Last Modified : 26 Apr, 2018 04:26 pm


கேப்டன்(ஐ.பி.எல்) கூல் தோனிக்கும், சுரேஷ் ரெய்னாவுக்கும் சக வீரர்கள் என்பதைத் தாண்டிய ஒரு பந்தம் எப்போதுமே உண்டு. தோனியுடன் சேர்ந்து ஆரம்பத்திலிருந்தே சி.எஸ்.கே-வுக்காக விளையாடி வருகிறார். தமிழ் ரசிகர்கள் தோனியின் மேனரிஸத்தால் ஈர்க்கப்பட்டு அவரை 'தல' என்று அழைக்கிறார்கள். 

அதற்கடுத்தப் படியாக, தோனி-ரெய்னா ஆகியோரின் பிணைப்பைப் பார்த்து, சுரேஷ் ரெய்னாவை 'சின்ன தல' எனக் குறிப்பிடுகின்றனர். 

இரண்டாண்டு தடையிலிருந்து மீண்டு வந்த சி.எஸ்.கே இந்த வருடம் ஐ.பி.எல்லில் தூள் கிளப்புகிறது. போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு கடந்த மாதம் சென்னையில் நடந்த பிரஸ் மீட்டில் தோனி பேசினார். அப்போது அணியின் கடந்த காலங்களை நினைவுக் கூர்ந்து, உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார். அந்த அறையில் அமைதி நிலவ, உடனே தண்ணீர் எடுத்துக் கொடுத்து அவரை ஆசுவாசப் படுத்தினார் சுரேஷ் ரெய்னா. இப்படி இவர்களுக்குள் அழகிய தருணங்கள் நிறைய உண்டு. 


தற்போது இவர்களைப் போலவே இவர்களின் மகள்கள் ஸிவா தோனி, க்ரேசியா ரெய்னா ஆகியோரும் நெருங்கிய தோழிகளாகியுள்ளனர். 

அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்த சுரேஷ் ரெய்னா, 'நியூ பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ், இப்போது நேற்றைய மேட்சின் ஹை-லைட்ஸ்களை டேப்ளட்டில் பார்ப்பதில் பிஸியாக இருக்கிறார்கள். 2 லிட்டில் பிரின்சஸ்' என க்யூட் ஸ்மைலியுடன் தெரிவித்துள்ளார். அடுத்த விநாடியே படம் வைரல் ஆக ஆரம்பித்திருக்கிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close