2019 ஐ.பி.எல் யுனைடெட் அரபு அமிரகத்துக்கு மாற்றப்படுகிறது?!

  Newstm Desk   | Last Modified : 27 Apr, 2018 10:10 am


2019 சீசனுக்கான ஐ.பி.எல் போட்டி யுனைடெட் அரபு அமிரகத்துக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு 12-வது ஐ.பி.எல் போட்டி மார்ச் 29ம் தேதி முதல் மே 19ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஆனால், அந்த இடைப்பட்ட காலத்தில் பொதுத் தேர்தலும் நடக்க வாய்ப்பிருக்கிறது. இதனால் விழிப்புடன் இருக்கும் பிசிசிஐ, எதற்கும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், அப்படி ஒரு சூழ்நிலை உருவானால், போட்டியை யுனைடெட் அரபு அமிரகத்துக்கு மாற்ற அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது. 

யுனைடெட் அரபு அமிரகத்தில், ஷார்ஜா, துபாய், அபு தாபி ஆகிய மூன்று இடங்களில் போட்டி நடைபெறும். இதற்கு முன்னர் இரண்டு முறை ஐ.பி.எல் போட்டி தேர்தல் காரணமாக மாற்றப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு ஒட்டுமொத்த தேர்தலும் தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது. 2014ம் ஆண்டு லீக் போட்டிகள் மட்டும் யு.ஏ.இ-ல் நடந்தன.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close