104 நாடுகளுக்கு டி20 அந்தஸ்து வழங்கியது ஐசிசி!

Last Modified : 27 Apr, 2018 10:53 am

104 உறுப்பு நாடுகளுக்கும் சர்வதேச டி20 அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக ஐசிசியின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஐ.சி.சியில் மொத்தம் 104 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் 12 நாடுகள் முழுநேர உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நாடுகள் எல்லா விதமான கிரிக்கெட் போட்டிகளும் விளையாட அனுமதி உண்டு.

இந்நிலையில, ஐ.சி.சி.யில் அங்கம் வகிக்கும் அத்தனை நாடுகளுக்கும் டி20 அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று கொல்கத்தாவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்தார். இதுவரை 18 நாடுகளுக்கு மட்டுமே சர்வதேச டி20 அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2018 ஜூலை 1 2018ம் தேதி உலகின் அனைத்து மகளிர் அணிக்கும் சர்வதேச டி20 அந்தஸ்து வழங்கப்படும். அதேபோல் அனைத்து ஆண்கள் அணிக்கும், 2019 ஜனவரி 1ம் தேதி சர்வதேச டி20 அந்தஸ்து வழங்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close