பதவியும் வேண்டாம், பணமும் வேண்டாம்: அதிருப்தியில் கம்பிர்

  Newstm Desk   | Last Modified : 27 Apr, 2018 09:11 pm


ஐபில் போட்டிகள் தொடங்கி களைகட்டி வரும் வேளையில் டெல்லி அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் கம்பிர், தான் விளையாடவுள்ள போட்டிக்கு தனக்கு சம்பளமே வேண்டாம் என தெரிவித்துள்ளார். 

கவுதம் கம்பீர், 2012 மற்றும் 2014ம் ஆண்டுகளில் கொல்கத்தா அணியின் கேப்டனாக ஜொலித்து ஐபிஎல்- இல் கோப்பையை வென்றார். நடப்பு தொடரில் டெல்லி அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட கம்பிர் அந்த அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரின் துரதிர்ஷ்டமோ என்னமோ, நடைபெற்ற 6 போட்டிகளில் 5 போட்டிகளில் தோல்வியடைந்து டெல்லி அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. 

ஐபிஎல் தோல்வியால் மனமுடைந்த கம்பிர், டெல்லியின் தோல்விகளுக்கு பொறுப்பேற்று கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் என தகவல் வெளியானது. மேலும் அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தற்போது தொடர் தோல்வியின் காரணமாக டெல்லி அணிக்கு இனி விளையாட இருக்கும் போட்டிகளுக்கு சம்பளம் வாங்காமல் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் போட்டிக்கு கம்பிருக்கு ரூ. 2.8 கோடி சம்பளமாக வழங்கப்படுவது குறிப்பிடதக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close