டெல்லி டேர்டெவில்ஸ்: மொரிஸுக்கு பதில் ஜூனியர் டாலா சேர்ப்பு

  Newstm Desk   | Last Modified : 28 Apr, 2018 10:29 am


டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஆல்-ரவுண்டர் கிறிஸ் மொரிஸ், இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் இருந்து விலாகினார். 

11-வது ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வரும் அதே நேரத்தில், வீரர்கள் காயம் காரணமாக விலகுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை சுமார் 10 வீரர்கள் விலகிய நிலையில் தற்போது டெல்லி அணியில் இடம் பிடித்திருந்த தென் ஆப்பிரிக்கா ஆல்-ரவுண்டர் மொரிஸ் விலாகியுள்ளார். டெல்லி அணி பங்குபெற்ற ஆறு போட்டிகளில் நான்கில் மட்டுமே மொரிஸ் விளையாடினார். நான்கு போட்டிகளில் 46 ரன் மற்றும் மூன்று விக்கெட் எடுத்தார். 

அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டதால் போட்டியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் நாடு திரும்புகிறார். அவருக்கு பதிலாக அவரது அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜூனியர் டாலா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை மூன்று சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள டாலா 7 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close