ஐ.பி.எல்-ல் முதல் அரைசதம் அடித்து ப்ரித்வி ஷா புரிந்த சாதனை

  Newstm Desk   | Last Modified : 28 Apr, 2018 05:05 pm


இந்தியா யு-19 அணி கேப்டன் ப்ரித்வி ஷா, ஐ.பி.எல் போட்டியில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார். 

ஐ.பி.எல் போட்டியில் நேற்று டெல்லி டேர்டெவில்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. கம்பிர் பதவி விலகியதால், டெல்லி அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் தலைமை தாங்கினார். அணியை சிறப்பாக வழி நடத்திய ஷ்ரேயாஸ் ஐயர் அபார வெற்றியை பெற்று கொடுத்தார். போட்டியில் ஷ்ரேயாஸ் கடைசி வரை களத்தில் நின்று 93 ரன் விளாசி வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். 

அதே சமயம் அணியின் இளம் வீரரான ப்ரித்வி ஷா 44 பந்துகளில் 62 ரன் எடுத்து, வெற்றிக்கு பங்கு வகித்தார். இதன் மூலம் ஐ.பி.எல்-ல் முதல் அரைசதம் அடித்ததுடன், அரைசதம் அடித்த இளம் வீரர் என்ற பெயரை பெற்றார். ப்ரித்வி ஷாவுக்கு 18 வயது 169 நாட்கள் ஆகிறது. 

2013ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்தார். அப்போது அவருக்கும் வயது 18, 169 நாட்களாக இருந்தது. இதனால் இருவரும் பட்டியலில் முதல் இடத்தை சேர்ந்து பிடித்துள்ளனர். இரண்டாவது இடத்தில் ரிஷாப் பந்த் (2017, வயது 18, 212 நாட்கள்) இருக்கிறார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close