தோல்விக்கு பின் ஹர்பஜனின் ட்விட்..

  Newstm Desk   | Last Modified : 29 Apr, 2018 02:25 pm

குதிரை போல் மும்மடங்கு வேகத்தில் ஓட தயாராக உள்ளோம் என்று நேற்றைய தோல்விக்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தேர்ந்தெடுகக்ப்பட்டதில் இருந்தே தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டு வருகிறார்  ஹர்பஜன் சிங். அவர் பதிவுகள் அனைத்து சென்னை ரசிகர்களை மிகவும் கவரும் விதத்தில் அமைந்துள்ளன. 

சென்னை அணி தொடர் வெற்றியின் போது ஜாலியாக பதிவிட்டு வந்த ஹர்பஜன் சிங் நேற்றைய தோல்விக்கு பின் என்ன கூறுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். 

இந்நிலையில் நேற்றைய தோல்விக்கு பிறகு, தோல்வி என்னும் அடி சறுக்கியது ஆனால் நாம் யானை போல் எழுவதற்கு நேரம் பிடிக்க போவதில்லை குதிரை போல் மும்மடங்கு வேகத்தில் ஓட தயாராக உள்ளோம் . தோல்வியின் பாடம் என் வெற்றியை அழகாக்கும் என்று பதிவிட்டுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close