வைரலாகும் தோனி, ரெய்னா, ஹர்பஜனின் வாண்டுகள் வீடியோ!

  Newstm Desk   | Last Modified : 29 Apr, 2018 09:43 pm


முன்னணி கிரிக்கெட் வீரர்கள் களத்தில் ஒற்றுமையாக விளையாடுவது போல அவர்களின் குழந்தைகளும் ஒற்றுமையாக விளையாடும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

முன்னணி இந்திய கிரிகெட் வீரர்களான மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரைனா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒன்று சேர்ந்துள்ளனர். இந்த கூட்டணிக்காகவே சிஎஸ்கேக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். ஆனால் இவர்களின் ஆட்டத்தைவிட இவர்களின் குழந்தைகளின் விளையாட்டு, காண்போரை ரசிக்க தூண்டுகிறது.


தோனி மகள் ஸிவா, ரைனா மகள் கிரேஸியா மற்றும் ஹர்பஜன் மகள் ஹினாயா மூன்று பேரும் கைக்கோர்த்து ஒற்றுமையாக விளையாடும் வீடியோ ஒன்றினை சுரேஷ் ரைனா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் மூன்று க்யூட் குட்டிஸ்களும்,‘ரிங்கா ரிங்கா ரோசஸ்’ பாடலைப் பாடிக்கொண்டு விளையாடும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close