மகளுக்கு பேட்டிங் பயிற்சி தரும் ஹர்பஜன்! வைரல் வீடியோ

  Newstm Desk   | Last Modified : 01 May, 2018 10:51 pm


ட்விட்டரில் தனது வெற்றி மகிழ்ச்சியை தமிழில் பதிவிட்டு பகிர்ந்து வந்து நெட்டிசன்களால் தமிழ்புலவர் என அழைக்கப்படும் ஹர்பஜன் சிங் தன் மகளுடன் விளையாடிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

இந்திய சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் கடந்த பல வருடங்களாக மும்பை அணியில் விளையாடி வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு பின் ஐபிஎல்- இல் களமிறங்கிய சென்னை அணிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஹர்பஜன் சிங், தனது மகளுக்கு பேட்டிங் கற்றுக்கொடுப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 


முன்னதாக தோனி மகள் ஸிவா, ரெய்னா மகள் கிரேஸியா, ஹர்பஜன் மகள் ஹினயா ஆகியோர் ஒன்றாக சேர்ந்து விளையாடிய வீடியோ ஒன்று வைரலானது. தற்போது அப்பாவும் மகளும் சேர்ந்து விளையாடும் வீடியோ காட்சிகள் இணையத்தை கலக்கி வருகின்றன. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close