ஐசிசி வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய அணியை பின்னுக்கு தள்ளி, இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது. 2013ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து அணி, இந்திய அணியை பின்னுக்கு தள்ளியுள்ளது.
இங்கிலாந்து அணி 125 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்திய அணி 122 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. 113 புள்ளிகளுடன் இருக்கும் தென் ஆப்பிரிக்கா, 2-வது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
112 புள்ளிகளுடன் நியூசிலாந்து நான்காவது, 104 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா ஐந்தாவது இடங்களில் உள்ளன. பாகிஸ்தான், 102 புள்ளியுடன் ஆறாவது இடத்தில் இருக்கிறது. வங்கதேசம், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகள் 7ல் இருந்து 12ம் இடங்களின் முறையே உள்ளன.