ஆசிய போட்டியில் வெண்கலம்; சிறந்த தரவரிசையில் ஹெச்.எஸ். பிரணாய்

  Newstm Desk   | Last Modified : 03 May, 2018 04:16 pm


பேட்மின்டன் தரவரிசையில் இரண்டாவது மிகப்பெரிய தரவரிசையைக் கொண்ட இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஹெச்.எஸ். பிரணாய். 

சீனாவின் வுகான் நகரில் ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மின்டன் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் அரையிறுதிச் சுற்றில் இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் போட்டியாளர்கள் சாய்னா நேவால் மற்றும் ஹெச்.எஸ். பிரணாய் தோல்வி கண்டு, வெண்கலப் பதக்கத்தை பெற்றனர். ஆசிய போட்டியில் பிரணாய் வெல்லும் முதல் வெண்கலப் பதக்கம் இதுவாகும். 

இந்த நிலையில், பதக்கம் வென்றதன் மூலம், பேட்மின்டன் தரவரிசையில் 10-வது இடத்தில் இருந்த பிரணாய், 8-வது இடத்துக்கு முன்னேறினார். முன்னாள் நம்பர் ஒன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், இரண்டு இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்தார். ஒற்றையர் பிரிவில் மிகப்பெரிய தரவரிசையை பெரும் இரண்டாவது இந்திய வீரர் என்ற பெயரை பிரணாய் பெற்றார். மேலும், ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். 

இந்தியாவின் தினேஷ் கன்னா (1965), அனுப் ஸ்ரீதர் (2007) ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியிருந்தனர். 

கடந்த மாதம் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் அணிகளுக்கு இடையிலான போட்டியில் தங்கப் பதக்கத்தை பிரணாய் வென்றார். 2017ம் ஆண்டு பிரணாய், கோல்ட் பிரிக்ஸ் போட்டியில் தங்கம் வென்றார். இரண்டு சூப்பர் சீரிஸ் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறினார். தேசிய சாம்பியன் பட்டத்தை முதல்முறையாக கைப்பற்றி அசத்தியிருந்தார். மேலும், உலகின் முன்னணி பேட்மின்டன் வீரர்களை [தவுபிக் ஹிதாயத் (2013), லின் தன் (2015), சோங் வெய் (2017, இரண்டு முறை) மற்றும் சென் லோங் (2018) வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பிரணாய் பெற்றுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close