ஐ.பி.எல்: இரண்டு முக்கிய போட்டிகளின் இடம் மாற்றம்

  Newstm Desk   | Last Modified : 04 May, 2018 05:28 pm


2018 சீசனுக்கான ஐ.பி.எல்-ல் இரண்டு போட்டிகளின் இடங்கள் மாற்றப்பட்டுள்ளது.

11-வது ஐ.பி.எல் போட்டி தொடங்கப்பட்டு ரசிகர்களின் ஆரவாரங்களுக்கு மத்தியில் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இப்போட்டியின் துவக்கத்தில் சென்னையில் நடைபெற இருந்த சி.எஸ்.கே அணியின் போட்டிகள், காவிரி பிரச்னை காரணமாக புனேவின் மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்துக்கு மாற்றப்பட்டது. இந்த மைதானத்தில் தான் எலிமினேட்டர் மற்றும் இரண்டாவது தகுதிச் சுற்று போட்டி நடப்பதாக இருந்தது. இந்த நிலையில், இந்த இரு போட்டிகளுக்கான இடம் புனேவில் இருந்து கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

முதல் தகுதிச் சுற்று மே 22ந்தேதி, எலிமினேட்டர் மே 23ம் தேதி, இரண்டாம் தகுதிச் சுற்று மே 25ம் தேதி மற்றும் இறுதிச் சுற்று ஆட்டம் மே 27ம் தேதி நடக்க இருக்கிறது. முதல் தகுதிச் சுற்று மற்றும் இறுதிச் சுற்று போட்டிகள் மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close