நியூசிலாந்து ஓபன் அரையிறுதியில் சாய் பிரனீத்

  Newstm Desk   | Last Modified : 04 May, 2018 06:12 pm


ஆக்லாந்தில் நியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்திய வீரர் சாய் பிரனீத் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். போட்டியில் தற்போது மிஞ்சியுள்ள ஒரே ஒரு இந்திய போட்டியாளர் பிரனீத் மட்டுமே. 

ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், இலங்கையின் நிலுகாவை 21-7, 21-9 என்ற நேர்செட் கணக்கில் 28 நிமிடங்களில் சாய் பிரனீத் வீழ்த்தி, அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார். அந்த ஆட்டத்தில் இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டியை, பிரனீத் எதிர்கொள்கிறார்.  

மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில், இந்திய வீரர் சமீர் வர்மா 19-21, 9-21 என்ற கணக்கில் சீனாவின் லின் டானிடம் வீழ்ந்து வெளியேறினார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் மனு அட்ரி - சுமித் ரெட்டி இணையும் தோல்வி அடைந்து வெளியேறியது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close