ஐ.பி.எல்: களமிறங்குகிறார் ஏபி டி; சென்னை - பெங்களூரு இன்று மோதல்

  Newstm Desk   | Last Modified : 05 May, 2018 12:05 pm


11-வது ஐ.பி.எல் தொடரில் இன்று நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. மாலை 4 மணிக்கு தொடங்கும் 35-வது லீக் போட்டி, புனேவில் நடைபெறுகிறது. 

சி.எஸ்.கே அணி 9 போட்டிகளில் 6 வெற்றி, 3 தோல்வி பெற்று, 12 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. பலம் பொருந்திய அணியாக இருந்தாலும், சில போட்டிகளில் பீல்டிங், பந்துவீச்சில் சொதப்புகிறது. இதனை கருத்தில் கொண்டு செயல்படும் பட்சத்தில் அணி வெற்றியை நோக்கி பயணிக்கும். கடந்த ஏப்ரல் 25ம் தேதி பெங்களூருவுடன் மோதிய போட்டியில் சி.எஸ்.கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெறுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 8 போட்டிகளில் 3ல் மட்டுமே வெற்றி பெற்று மோசமான நிலைமையில் உள்ளது. அந்த அணி புள்ளிபட்டியலில் 6-வது இடத்தில் இருப்பதால், பட்டியலில் முன்னேற கடுமையாக போராடும். அந்த அணிக்கு மேலும் பலம் சேர்க்க ஏபி டி வில்லியர்ஸ், களமிறங்குகிறார். காய்ச்சல் காரணமாக இரு போட்டிகளில் இருந்து விலகியிருந்த டி வில்லியர்ஸ், இன்றைய போட்டியில் குயின்டன் டி காக்கிற்கு பதிலாக களமிறங்குவார். டி காக், தனிப்பட்ட காரணங்களுக்காக இன்று நடக்கும் போட்டியில் இருந்து விலகியுள்ளார். 

இரு அணிகளும் இதுவரை மோதிய போட்டிகளில் 13ல் சி.எஸ்.கே அணியும், 7ல் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன. புனேவில் இரு அணிகளும் முதல்முறையாக மோதுகின்றன. பெங்களூருவுக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெயரை தோனி பெற்றுள்ளார். 678 ரன்களை அவர் அடித்துள்ளார். சுரேஷ் ரெய்னா 617 ரன்கள் அடித்திருக்கிறார். சி.எஸ்.கே-வுக்கு எதிராக அதிக ரன் அடித்த வீரர் கோலி (724) ஆவார். 


இரு அணிகளின் விவரம்:-

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: எம்.எஸ். தோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, பாப் டு பிளேஸிஸ், ஹர்பஜன் சிங், ட்வயன் பிராவோ, ஷான் வாட்சன், அம்பதி ராயுடு, தீபக் சாகர், கே.எம். ஆசிப், கனிஷ்க் சேத், லுங்கிசனி ங்கிடி, துருவ் ஷோரே, முரளி விஜய், சாம் பில்லிங்ஸ், மார்க் வுட், க்ஷிதிஸ் சர்மா, மோனு குமார், சைதன்யா பிஷ்ணோய், இம்ரான் தாஹிர், கார்ன் சர்மா, ஷர்துல் தாகூர், என். ஜெகதீசன், டேவிட் வில்லி. காயம் காரணமாக இன்றைய போட்டியில் இருந்து விலகியுள்ள தீபக் சாகருக்கு பதிலாக லுங்கிசனி ங்கிடி விளையாடவுள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி: விராட் கோலி (கேப்டன்), ஏபி டி வில்லியர்ஸ், சர்ஃபராஸ் கான், பிரண்டன் மெக்கல்லம், கிறிஸ் வோக்ஸ், கொலின் டி கிராண்ட்ஹோம், மொயீன் அலி, குயின்டன் டி காக், உமேஷ் யாதவ், யூசுவேந்திர சாஹல், மனன் வோஹ்ரா, குல்வாந்த் க்ஹெஜ்ரொலியா, அனிகேத் சவுத்ரி, நவ்தீப் சைனி, முருகன் அஷ்வின், மந்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர், பவன் நெகி, முகமது சிராஜ், பார்திவ் படேல், அனிருதா ஜோஷி, பவன் தேஷ்பாண்டே, டிம் சௌதீ, கோரே ஆண்டர்சன்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close