அசால்ட்டா அடித்து பெங்களூருவை அதிர வைத்த சென்னை!

  Newstm Desk   | Last Modified : 05 May, 2018 08:00 pm


இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அசால்ட்டாக ரன் எடுத்து பெங்களூருவை கலங்க வைத்து வெற்றியை சுவைத்துள்ளது சென்னை அணி. 

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில், புனேவில் இன்று நடந்த 35 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்து பெங்களுரு அணி சுழல் வீச்சை வாரி வழங்கியது. சென்னை சுழலில் சுருண்ட பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி, அசால்ட்டா இலக்கை அடைந்து பெங்களூருவை வீழ்த்தியது. தொடக்க வீரர் வாட்சன் 11 ரன்களில் வெளியேற, அம்பதி ராயுடு 32 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து களமிறங்கிய ரெய்னா 25 ரன்களும், துருவ் 8 ரன்களிலும் அவுட்டானர்கள். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா அடிப்போம் என தோரணியில் களமிறங்கிய தோனி, ப்ராவோவின் அதிரடி ஆட்டத்தால் சென்னை 18 ஓவர்களிள் 128 ரன் எடுத்து சென்னை அணி வெற்றிப்பெற்றது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close