கேப்டன் தோனியின் பொன்மொழி இது தான்- ஜடேஜா பெருமிதம்!!

  Newstm Desk   | Last Modified : 07 May, 2018 04:39 pm


கேப்டன் கூல் தோனியின் தாரக மந்திரம் பற்றி சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா பகிர்ந்துள்ளார். 

11-வது ஐ.பி.எல்-ல் துவக்கத்தில் இருந்து அதிரடி காட்டி வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ். மற்ற அனைத்து அணிகளுக்கும் சவால் விடும் அளவுக்கு மிகக் கடுமையான ஒரு அணியாகவே திகழ்கிறது. இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 7ல் வெற்றி பெற்று, புள்ளிபட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இன்னும் ஒரே ஒரு வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறிவிடும். 

இரண்டு முறை சென்னை அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் தோனி, இம்முறையும் கோப்பையை நோக்கி அணியை வெற்றிகரமாக வழி நடத்தி வருகிறார். சென்னை அணியில் தற்போது மிகவும் கடுமையான விமர்சனத்தை சந்தித்து வருபவர் ஜடேஜா. இவரை சென்னை அணி தக்கவைத்துக் கொண்டது. ஆனால், தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இவர், கடந்த போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக சிறப்பாக ஆடினார். 

இந்த நிலையில், கேப்டன் தோனியின் பொன்மொழி பற்றி ஜடேஜா கூறியுள்ளார். அவர் கூறுகையில், "அணியின் கூட்டத்தில் எப்போதும் தோனி, நாம் வெற்றி அல்லது தோல்வி அடைந்தால், நம்மளுடைய நோக்கம் அனைத்தும் ஒருவரை மட்டும் குறிப்பிட்டு பழி சொல்வது கூடாது என்பதில் தான் இருக்க வேண்டும். எதுவாக இருந்தாலும் அது ஒட்டுமொத்த அணியின் முயற்சியில் தான் ஏற்பட்டது. இது தான் எங்களுடைய மந்திரம். இதுவே எங்களது அணியை ஒற்றுமையாக வைக்கும் கட்டமைப்பாகவும். 


தோனி எப்போதும், நாம் ஒன்றாக ஜெயித்தோம், ஒன்றாக தோற்றோம் என்று தான் சொல்வார். இதில் அற்புதமான விஷயம் என்றால், உங்கள் மேல் நம்பிக்கை வைத்து, ஒரு தலைவன் வெற்றியோ, தோல்வியோ, ஒன்றாக இருப்போம் என்ற நம்பகத் தன்மையை உங்களுக்கு உணர்த்துவது தான்" என்றார். 

விமர்சனங்களுக்கு வார்த்தைகளைவிட செயல்கள் தான் முக்கியம் என்று நினைப்பவர் தோனி. அதை அவர் பல முறை நிரூபித்து காட்டியுள்ளார். தற்போது ஜடேஜா மீது எழுந்த விமர்சனங்களுக்கும், அவர் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தனது செயல் மூலம் நிரூபித்து காட்டி இருக்கிறார். இந்த சிறப்பான ஆட்டத்தை அவர், வரும் போட்டிகளிலும் தொடர வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வருகிற 11ம் தேதி ஜெய்ப்பூரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close