முதல்தர போட்டிக்கு திரும்புகிறார் பாகிஸ்தானின் அப்துல் ரஸாக்

  Newstm Desk   | Last Modified : 07 May, 2018 06:34 pm


முன்னாள் பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் அப்துல் ரஸாக் மீண்டும் முதல்தர போட்டிக்கு திரும்புகிறார். இதன் மூலம், பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் அவர் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. 

2014ம் ஆண்டு அப்துல் ரஸாக் கடைசியாக முதல்தர போட்டியில் விளையாடினார். அதன் பிறகு, ஃபார்மில் இல்லாத காரணத்தால் அவர் அணியில் இடம் பெறவில்லை. தொடர்ந்து அணியில் இடம் பெறாத ரஸாக், கடந்த சீசனில் பந்துவீச்சு பயிச்சியாளராக செயல்பட்டிருந்தார். 1996ம் ஆண்டு சர்வதேச போட்டியில் கால்பதித்த ரஸாக், 46 டெஸ்ட், 265 ஒருநாள் மற்றும் 32 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 

1999, 2003, 2011 ஆகிய மூன்று உலக கோப்பைகளில் பங்கேற்றுள்ள ரஸாக்கின் ஆட்டம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இதனால் 2011ம் ஆண்டுக்கு பின் அவர் தேசிய அணியில் இடம் பிடிக்கவில்லை. அதன் பிறகு 2013ல் மீண்டும் அணியில் இணைக்கப்பட்ட அவருக்கு அந்த ஆண்டே, தேசிய அணியில் இடம் பெற்றது கடைசியாக இருந்தது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close