பிசிசிஐ மறுப்பு; பகலிரவு டெஸ்ட்டை ரத்து செய்தது ஆஸ்திரேலியா

  Newstm Desk   | Last Modified : 08 May, 2018 05:13 pm


பகல்-இரவு போட்டிக்கு இந்தியா மறுத்ததை அடுத்து, வழக்கமான முறையில் போட்டியை நடத்த ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா விளையாட இருக்கிறது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் சுற்றுப்பயணம் தொடங்கும் நிலையில், டிசம்பர் 6ம் தேதி அடிலெய்டில் முதல் டெஸ்ட் போட்டி நடக்கிறது. அடிலெய்டில் நடக்கும் டெஸ்ட் போட்டியை, கிரிக்கெட் ஆஸ்திரேலியா பகல்-இரவு போட்டியாக நடத்தி வருகிறது. இதில் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தப்படும். ஆனால், பிசிசிஐ தங்களது கலாச்சார முறைப்படி சிவப்பு நிற பந்துகளில் மட்டுமே விளையாடுவோம். எனவே பகல்-இரவு போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தது. 

இந்த நிலையில், இந்தியாவின் இந்த மறுப்பை ஏற்றுக் கொண்ட கிரிக்கெட் ஆஸ்திரேலியா, பகல்-இரவு போட்டியை ரத்து செய்தது. இதனால் 2015ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக பகல்-இரவு போட்டி அடிலெய்டில் நடைபெற போவதில்லை. மேலும், போட்டி வழக்கமான முறையிலேயே நடத்தப்படுகிறது. 

"டெஸ்ட் போட்டியை வளர்க்க, ஒவ்வொரு கோடையிலும் பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்துகிறோம். ஆனால், பிசிசிஐ-ன் விருப்பத்திற்கேற்ப தற்போது பகலிரவு டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டு, வழக்கமான முறையில் நடத்தப்பட உள்ளது" என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close