சி.எஸ்.கே-க்கு எதிராக புதிய ஜெர்சியுடன் களமிறங்கும் ராஜஸ்தான்

  Newstm Desk   | Last Modified : 09 May, 2018 05:10 pm


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் புதிய ஜெர்சியை அணிந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி போட்டியிடுகிறது. 

11-வது ஐ.பி.எல்-ன் 43-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் ராஜஸ்தான் அணி வழக்கமான நீல நிற ஜெர்சிக்கு பதிலாக பிங்க் நிற ஜெர்சியை அணிய இருக்கிறது. அந்த புதிய ஜெர்சி, இன்று சவாய் மான்சிங் மருத்துவ கல்லூரியில் நடந்த புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ராஜஸ்தான் கேப்டன் ரஹானே, க்ளாஸென், கிருஷ்ணப்பா கவுதம், மஹிபால் ஆகியோர் கலந்து கொண்டனர். புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த பிங்க் நிற ஜெர்சியை ராஜஸ்தான் அணிய உள்ளது. 

பஞ்சாபை 15 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி, பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திய ராஜஸ்தான் அணி, தனது அடுத்த போட்டியில், சி.எஸ்.கே-வுடன் சவாய் மான்சிங் மைதானத்தில் வரும் 11ம் தேதி மோதுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close