அயர்லாந்து டி20 போட்டி: குழப்பும் விராட் கோலி!

  Newstm Desk   | Last Modified : 09 May, 2018 06:16 pm


அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விராட் கோலி விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிசிசிஐ தேர்வுக்குழு நேற்று ஆறு தொடர்களுக்கான இந்திய அணியை அறிவித்தது. அதில், அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 அணியில் கேப்டன் விராட் கோலி இடம் பெற்றுள்ளார். 

ஜூன் 14ம் தேதி தொடங்கும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்காத கோலி, கவுன்டி கிரிக்கெட்டில் விளையாட உள்ளார். இதனால் அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியிலும் அவர் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், டி20 அணியில் விராட் கோலி இடம் பிடித்திருப்பது குழப்பத்தை உண்டாக்கியுள்ளது. இந்த குழப்பத்தை சர்ரே அணி நிர்வாகம் தீர்த்து வைத்துள்ளது. 

இது குறித்து அந்த அணி நிர்வாகம் தெரிவிக்கையில், "அயர்லாந்துக்கு எதிரான இரண்டு டி20 போட்டிகள் ஜூன் 27 மற்றும் 29 தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதில் முதல் டி20 போட்டியின் போது, விராட் - யார்க்ஷிர் அணிக்கு எதிராக தனது கடைசி கவுன்டி போட்டியில் விளையாட இருக்கிறார். இதன் காரணமாக அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவர் பங்கேற்கமாட்டார். அந்த அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் விராட் விளையாடுவார்" என்று தெரிவித்துள்ளது. 

இது குறித்து பிசிசிஐ தரப்பில் இருந்து அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. என்றாலும், விராட் பங்கேற்கவில்லை என்றால் ரோஹித் கேப்டனாக அணியை வழி நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய டி20 அணி: விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோஹித் சர்மா, ராகுல், சுரேஷ் ரெய்னா, மனிஷ் பாண்டே, எம்.எஸ். தோனி, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், சாஹல்,குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close