என் முதல் காதலி இவர்தான்...மனைவியிடம் சொல்லிடாதீங்க- குறும்புக்கார தோனி!

  Newstm Desk   | Last Modified : 10 May, 2018 01:08 pm


எம்.எஸ். தோனி தனது முதல் காதலி குறித்த தகவலை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். 

முன்னாள் இந்திய அணி கேப்டன் தோனி, 11-வது ஐ.பி.எல் சீசனில் நல்ல ஃபார்மில் இருக்கிறார். சென்னை அணியை சிறப்பாக வாழை நடத்தி வரும் அவர், 10 போட்டிகளில் 360 ரன்கள் விளாசியுள்ளார். 27 சிக்ஸர்களை பறக்கவிட்டார். புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் சென்னை அணி, பிளே-ஆஃப் சுற்றுக்கள் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. 

ரசிகர்களின் பெரும் பட்டாளத்தை வைத்திருக்கும் தோனியின் ஆட்டத்தை கண்டு உற்சாகமளிக்க, மனைவி சாக்ஷி, மகள் ஸிவா ஆகியோரும் உடன் உள்ளனர். இந்த நிலையில், ஒரு விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தோனி, தன்னுடை முதல் காதலியின் பெயரை கூறினார். ஆனால், போட்டியில் வைக்கும் ட்விஸ்ட்டையே இதிலும் வைத்தார். 

தனது காதலி பெயரின் மூன்றாவது எழுத்து 'ஏ' என்று தெரிவித்த அவர், முழு பெயரை சொல்லவில்லை. இதனால் குழப்பத்தில் தவித்த அனைவரையும் பார்த்த தோனி, சிறிது நேரம் கழித்து, அவரது பெயர் 'ஸ்வாதி' என்று தெரிவித்தார். "இதை எனது மனைவி சாக்ஷியிடம் சொல்லிவிட வேண்டும், சரியா?" என்றும் சொல்லி குறும்பாக சிரித்தார். இதற்காக சாக்ஷி வருத்தப்படமாட்டார். ஏனெனில், 1999ம் ஆண்டு 12ம் வகுப்பு படிக்கும் போது தான் தோனி, ஸ்வாதியை பார்த்தார். 


இந்திய அணிக்கு மூன்று ஐசிசி கோப்பைகளை பெற்று கொடுத்த முதல் கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ள தோனி, 2014ல் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். 2017ம் ஆண்டு குறுகிய ஓவர் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். இருந்தாலும், இன்னும் அவரை சுற்றி பல விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், அதன் அனைத்திற்கும் தனது பேட்டால் பதிலடி கொடுத்து வருகிறார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close