பாக் கேப்டன் சர்ஃபராஸிடம் சூதாட்ட பேரம்- போட்டி அமைப்பாளருக்கு தடை

  Newstm Desk   | Last Modified : 10 May, 2018 02:48 pm


பாகிஸ்தான் கேப்டனிடம் சூதாட்ட பேரம் பேசிய கிரிக்கெட் போட்டி அமைப்பாளர் இர்ஃபான் அன்சாரியை தடை செய்தது ஐசிசி.

கடந்த 2017ம் ஆண்டு அபு தாபியில் இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற இருந்தது. இதற்கு முன், கிரிக்கெட் போட்டியின் அமைப்பாளரும், ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தின் முன்னாள் நிர்வாகியுமான இர்ஃபான் அன்சாரி, பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸிடம் சூதாட்டம் செய்ய பேரம் பேசியுள்ளார். சர்ஃபராஸ் இந்த விவகாரத்தை உடனடியாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு எடுத்துச் சென்றார். 

இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஐசிசி-யிடம் புகார் அளித்ததை அடுத்து, இர்ஃபான் அன்சாரி தற்காலிகமாக தடை செய்யப்பட்டார். மூன்று பிரிவுகளால் குற்றம்சாட்டப்பட்டுள்ள அன்சாரி, வரும் மே 19ம் தேதி முதல் 14 நாட்களுக்குள், இது குறித்து பதிலளிக்க வேண்டும் என்று ஐசிசி-யால் உத்தரவிடப்பட்டுள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close