ஆஸ்திரேலியா ஓபன்: காலிறுதியில் பிரனீத், சமீர்

  Newstm Desk   | Last Modified : 10 May, 2018 06:35 pm


ஆஸ்திரேலியா ஓபன் பேட்மின்டன் போட்டியின் காலிறுதிக்கு பிரனீத், சமீர் முன்னேறினர். 

சிட்னியில் நடந்து வரும் ஆஸ்திரேலியா ஓபன் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், சாய் பிரனீத் 21-12, 21-14 என்ற நேர்செட் கணக்கில் இந்தோனேசியாவின் பஞ்சி அஹ்மதை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். அடுத்த சுற்றில் பிரனீத், இந்தோனேசியாவின் லீ செக் யுவுடன் மோதுகிறார். 

மற்றொரு போட்டியில் இந்திய வீரர் சமீர் வர்மா, 21-16, 21-12 என ஜப்பானின் தகுமாவை தோற்கடித்து காலிறுதிக்குள் நுழைந்தார். காலிறுதியில் சமீர், சீனாவின் லு காங்கிஸுவை எதிர்கொள்கிறார். 

ஆண்கள் இரட்டையர் பிரிவில், இந்திய இணையான மனு அத்ரி - சுமித் ரெட்டி ஜோடியும் வெற்றி கண்டு காலிறுதிக்கு முன்னேறியது. 

பெண்கள் ஒற்றையர் பிரிவில் வைஷ்ணவி ரெட்டி தோல்வி கண்டார். இதனால் ஒற்றையர் பிரிவில் போட்டியிட்ட ஒரே ஒரு இந்திய வீராங்கனையும் வெளியேறினார். பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்திய இணைகள் தோல்வி கண்டன. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close