ஆஸ்திரேலியா ஓபன்: அரையிறுதியில் மனு-சுமித்; பிரனீத், சமீர் அவுட்!

  Newstm Desk   | Last Modified : 11 May, 2018 05:36 pm


ஆஸ்திரேலியா ஓபன் பேட்மின்டன் போட்டியில் இருந்து இந்திய ஒற்றையர் பிரிவு வீரர்கள் வெளியேறினர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், இந்திய வீரர் சாய் பிரனீத் 21-23, 13-21 என்ற கணக்கில் ஹாங்காங்கின் யு லீ செக்கிடம் தோற்றார். மற்றொரு காலிறுதிப் போட்டியில், சமீர் வர்மா 21-14, 21-6 என சீனாவின் காங்கிஸு லுவிடம் மண்ணை கவ்வினார். முன்னதாக பெண்கள் ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற ஒரே ஒரு வீராங்கனையும் அட்டமிழந்ததால், ஒற்றையர் பிரிவில் இந்திய போட்டியாளர்களுக்கு தொடரில் இடமில்லாமல் போனது. 

ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில், மனு அத்ரி - சுமித் ரெட்டி மற்றும் அர்ஜுன் - ராமசந்திரன் ஆகிய இந்திய இணைகள் மோதின. இதில் அர்ஜுன் இணையை, மனு அத்ரி ஜோடி வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close