மாட்ரிட் ஓபன்: நடால் அதிர்ச்சி தோல்வி; நம்பர் ஒன் இடத்தை இழக்கிறார்

  Newstm Desk   | Last Modified : 12 May, 2018 11:48 am


மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரர் ரஃபேல் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 

ஸ்பெயினில் களிமண் தரை போட்டியான மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் ஆண்கள் பிரிவு காலிறுதிச் சுற்றில், நம்பர் ஒன் வீரர் நடாலை, 7-5, 6-3 என ஆஸ்திரியாவின் டோமினிக் தியம் வென்று, அரையிறுதிக்கு முன்னேறினார். இதனால் நம்பர் ஒன் இடத்தை நடால் இழக்கிறார். இதனால் ரோஜர் பெடரர் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பார். 

பெண்கள் ஒற்றையர் பிரிவில், பெட்ரா கிவிடோவா, கிகி பெர்டென்ஸ் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close