ஓட்டுப்போட்ட கிரிக்கெட் குடிமகன்கள்

  Newstm Desk   | Last Modified : 12 May, 2018 11:46 pm

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்கள் ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே ஆகியோர் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்தனர்.


கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை மிகவும் தீவர பாதுகாப்பில் நடைபெற்றது. கர்நாடகாவில் உள்ள மொத்தம் 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் பெங்களூருவிலும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அனில் கும்ப்ளே ஆகியோரும் தங்களது குடும்பத்தினருடன் வாக்குச்சாவடி சென்று தனது வாக்குகளை பதிவு செய்தனர்.


இதேபோல், மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, பாஜக முதல்வர் வேட்பாளர் பிஎஸ் எடியூரப்பா, முன்னாள் பிரதமர் தேவகெளடாவின் குடும்பத்தார், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உள்ளிட்ட பலர் தங்களது ஜனநாயக கடமையாற்றினர். 


குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close