ஐ.பி.எல்: பஞ்சாப்பை பந்தாடியது கொல்கத்தா!

  Newstm Desk   | Last Modified : 12 May, 2018 08:31 pm


ஐ.பி.எல்-ன் 44-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

ஐ.பி.எல்-ன் 44-வது லீக் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இந்தூரில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்து, கொல்கத்தாவை பேட்டிங் செய்ய அழைத்தது.

கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டகாரரான சுனில் ஆரம்பமே அதிரடி என விளையாடி 75 ரன்களை குவித்தார். அதையடுத்து லைன் 27 ரன்களும், தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 50 ரன்களும் அடித்து அணிக்கு பலம் சேர்த்தனர். 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழந்து 245 ரன் எடுத்துள்ளது. 

246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 214 ரன்கள் மட்டுமே எடுத்து வெற்றியை கொல்கத்தாவிடம் பறிகொடுத்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close