முன்னாள் பாகிஸ்தான் ஹாக்கி வீரர் மன்சூர் அகமது காலமானார்

  Newstm Desk   | Last Modified : 13 May, 2018 11:48 am

பாகிஸ்தான் ஹாக்கி அணியின் முன்னாள் கோல் கீப்பர் மன்சூர் அகமது நேற்று கராச்சியில் காலமானார். 

மன்சூர் அகமது, 1990களில் பாகிஸ்தானின் ஹாக்கி அணியின் கேப்டனாக வலம்வந்தவர். பாகிஸ்தான் ஹாக்கி அணி சார்பாக 338 சர்வதேச ஆட்டங்களில் பங்கேற்று ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற பாகிஸ்தான் ஹாக்கி அணியில் அங்கம் வகித்தவர் ஆவார், அந்த அணியின் கோல் கீப்பராகவும் செயல்பட்டவர்.

இவர் கடந்த சில மாதங்களாக கடும் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். உடனடியாக இதய மாற்று சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்தியாவின் உதவியை எதிர்நோக்கினார். அவருக்கு சென்னையை சேர்ந்த மருத்துவமனை உதவி செய்வதாக அறிவித்தது. 

இந்நிலையில் அவர் நேற்று கராச்சியில் மரணமடைந்தார். அவருக்கு 47 வயதாகும். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close