ஜடேஜாவை பயப்பட வைத்த தோனி: வைரல் வீடியோ

  Newstm Desk   | Last Modified : 14 May, 2018 07:47 am

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி பந்துவீச்சின் போது தோனி ஜடேஜா மீது பந்தை விளையாட்டாக வீசுவது போன்று செய்து பயப்பட வைத்தார்.

புனே எம்சிஏ மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் அணிகளுக்கு இடையேயான போட்டி என்பதால் இந்த போட்டி விறுவிறுப்பாக இருந்தது.

இந்நிலையில் இந்த போட்டியில் சென்னை அணி ஆட்டத்தின் முதல் பகுதியில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அப்போது 7வது ஓவரை ஹர்பஜன் சிங் வீசினார். அதை ஷிக்கர் தவான் ஷார்ட் மிட்-விக்கெட்டில் அடித்தார். அதனை விக்கெட் கீப்பர் தோனி ஓடிச் சென்று தடுத்தார். அப்போது ஜடேஜாவுடம் மிட் விக்கெட்டை நோக்கி வந்தார். பந்தை தடுத்த தோனி உடனே ஜடேஜா மீது வீசுவது போன்ற செய்கை காட்டினார்.

இதனை பார்த்ததும்  ஜடேஜா பயந்து முகத்தை கைகளால் மறைத்துக்கொண்டார். தோனி சிரித்துவிட்டார்.

பரபரப்பான ஆட்டத்திற்கு நடுவே இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. எப்போதும் ஃபீல்டில் பெரும்பாலும் எந்த உணர்வையும் காட்டாத தோனி இந்த ஆண்டு ஐபிஎல்லில் சற்று வித்தியாசமாக தான் இருக்கிறார்.

வீடியோவை பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close