எங்கு விளையாடினாலும் ரசிகர்கள் ஆதரவு கிடைக்கிறது: நெகிழ்ந்த தோனி

  Newstm Desk   | Last Modified : 14 May, 2018 08:13 am

போட்டி எங்கு நடந்தாலும் ரசிகர்கள் ஆதரவு கிடைப்பதாக தோனி நேற்றைய வெற்றிக்கு பின் கூறினார். 

ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்ற பெற்ற பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பேசும் போது, ''ஆட்டத்தின் முதல் பகுதியை போல இரண்டாவது பகுதியிலும் பந்து ஸ்விங் ஆகும் என்று தான் நினைத்தேன். ஆனால் அப்படி நடக்காதது ஆச்சரியமாக உள்ளது. எங்கள் பேட்டிங்கின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. வாட்சனும் ராயுடுவும் தேவையான இடத்தில் பவுண்டரிகளை அடித்தனர். இல்லையென்றால் ஹைதராபாத் போன்ற அணிக்கு எதிராக 180 ரன்கள் எடுப்பது கடினமான ஒன்றாக இருந்திருக்கும். ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பே ராயுடுவுக்கான இடத்தை ஒதுக்கிவிட்டேன். என்னை பொறுத்த வரை அவர் சிறந்த வீரர். அவர் அதிரடியாக விளையாடுபவர் இல்லை என்றாலும் நேர்த்தியாக விளையாடுபவர்.அவரால் எந்த வித பந்துவீச்சையும் மிக எளிதாக எதிர்கொள்ள முடிகிறது.

சேஸிங்கின் போது எத்தனை ஓவர்கள் மீதம் இருக்கிறது என்பதை பொறுத்து தான் 4வதாக எந்த வீரர் களமிறங்க வேண்டும் என்பதை முடிவு செய்கிறோம்.

சென்னை மைதானத்தில் நாங்கள் ஒரு போட்டியில் தான் விளையாடினோம். புனேவில் எங்களுக்கு கிடைக்கும் ஆதரவு பெரியதாக இருக்கிறது. போட்டி எங்கு நடந்தாலும், எவ்வளவு தூரம் இருந்தாலும் ரசிகர்கள் பாரக்கிறார்கள் என்றார்.

நேற்றைய போட்டியில் சதம் அடித்து ஆட்டநாயகன் விருது பெற்ற அம்பத்தி ராயுடு பேசும்போது, ''டி20 போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவது நல்ல விஷயம். அதை நான் அனுபவித்து செய்கிறேன். பேட்டிங்கின் போது எனக்கும் வாட்சனுக்கும் இடையே நல்ல தொடர்பு இருந்தது. அவருடன் விளையாடுவது மிகவும் உதவியாக இருந்தது. இந்திய அணியில் மீண்டும் சேர்ந்தது மகிழ்ச்சியான ஒன்று. 4 நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் எந்த போட்டியிலும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். இந்திய அணிக்காக விளையாடும் போது சிறப்பாக விளையாடுவேன் என்று நம்புகிறேன்'' என்றார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close