தோனிக்கு புனே மைதான ஊழியர்கள் வழங்கிய சிறப்பு பரிசு!

  Newstm Desk   | Last Modified : 14 May, 2018 11:02 am


சி.எஸ்.கே கேப்டன் எம்.எஸ். தோனிக்கு புனே மைதானத்தின் ஊழியர் பரிசு கொடுத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. 

புனேவில் நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது. இதன் மூலம் பிளே-ஆஃப் சுற்றை சி.எஸ்.கே அணி உறுதி செய்தது. இந்த ஐ.பி.எல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் கேப்டன் தோனி அதிகளவில் அனைவரையும் கவர்ந்து வரும் அதே நேரத்தில், தோனியின் மகள் ஸிவாவும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். மகள், மனைவியுடன் ஐ.பி.எல் போட்டியை எதிர்கொண்டு வரும் தோனியும், கிடைக்கும் ஓய்வு நேரங்களில் மகள் ஸிவாவுடன் கழித்து வருகிறார். 

மைதானத்திற்கு மகளை தோனி அழைத்து வரும் புகைப்படங்களும் ஃபேமஸ். இந்த நிலையில், நேற்றைய போட்டிக்கு பிறகு, புனே மைதான ஊழியர்கள், தோனி-ஸிவாவின் ஓவியத்தை தோனிக்கு பரிசளித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close