மும்பைக்கு எதிரான விதிமீறல்; ரஹானேவுக்கு அபராதம்

  Newstm Desk   | Last Modified : 14 May, 2018 12:50 pm


மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விதிமுறையை மீறி செயல்பட்டதால் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரஹானேவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

ஐ.பி.எல் போட்டியில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மெதுவாக பந்துவீசியது தெரியவந்தது. இதனால் ராஜஸ்தான் கேப்டன் ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து வெளியான அறிக்கையில், "மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக மெதுவான பந்துவீச்சை பதிவு செய்ததற்காக ராஜஸ்தான் கேப்டன் ரஹானேவுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறான குற்றத்தை ராஜஸ்தான் அணி செய்வது, இது முதல்முறை. இந்த குற்றத்திற்காக கேப்டன் ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நாளை (15ம் தேதி) ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close