பஞ்சாப் -பெங்களூரு மோதல்... எதிர்பார்ப்பில் ராகுல், விராட் கோலி!

  Newstm Desk   | Last Modified : 14 May, 2018 03:22 pm


ஐ.பி.எல்-ல் இன்று நடக்கும் 48-வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் ராகுல், டியே மற்றும் பெங்களூரு கேப்டன் விராட் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ஐ.பி.எல்-ல் அதிக ரன் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருந்த ராகுல், மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். முதலிடத்தில் டெல்லியின் ரிஷாப் பன்ட், இரண்டாவது இடத்தில் ஹைதராபாதின் கேன் வில்லியம்சன் உள்ளனர். இன்று நடக்கும் போட்டியில் ராகுல், தனது அதிரடியால் மீண்டும் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதிக ரன் விளாசிய வீரர்கள் பட்டியல்:-

வீரர்கள்அணிபோட்டிரன்
ரிஷாப் பன்ட்
டெல்லி டேர்டெவில்ஸ்12582
கேன் வில்லியம்சன்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்12544
கே.எல். ராகுல்
கிங்ஸ் லெவன் பஞ்சாப்11537
அம்பதி ராயுடு
சென்னை சூப்பர் கிங்ஸ்12535
ஜோஸ் பட்லர்
ராஜஸ்தான் ராயல்ஸ்12509

அதே நேரம் அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியலில் பஞ்சாபின் ஆண்ட்ரியூ டியே முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் ஹர்திக் பாண்டியா இருக்கிறார். இதனால் அவரை முந்தவிடாமல், முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ள டியே முனைப்பு காட்ட வேண்டும். 

அதிக விக்கெட் எடுத்த வீரர்கள்:-

வீரர்கள்
அணி
போட்டி
விக்கெட் 
எக்கனாமி ரேட்
ஆண்ட்ரியூ டியே
கிங்ஸ்  லெவன் பஞ்சாப்11208.00
ஹர்திக் பாண்டியா
மும்பை இந்தியன்ஸ்11188.74
ட்ரென்ட் பௌல்டடெல்லி டேர்டெவில்ஸ்12159.24
முஜீப் உர் ரஹ்மான்கிங்ஸ்  லெவன் பஞ்சாப்
11146.99
சுனில் நரேன்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்12147.82


மேலும், இன்றைய போட்டியில், ஐ.பி.எல்-ல் 500 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் இணைய, பெங்களூரு கேப்டன் விராட் வாய்ப்புள்ளது. பன்ட், வில்லியம்சன், ராகுல், அம்பதி ராயுடு, ஜோஸ் பட்லர் ஆகியோர் 500 ரன்கள் கடந்த முதல் ஐந்து வீரர்களாக உள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close