பந்துவீச தாமதம்... ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்..!

  Newstm Desk   | Last Modified : 15 May, 2018 04:05 am


ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரஹானே தாமதமாக பந்துவீசியதாக எழுந்த புகாரில் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் 47-லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. 18 ஓவர்கள் முடிவிலேயே ராஜஸ்தான் அணி 171 ரன்களை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த ஞாயிறு அன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியினர் தாமதமாக பந்துவீசியதாக புகார்கள் எழுந்துள்ளன. ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் விதிமுறைகளின்படி பந்துவீச தாமதம் செய்யக்கூடாது. இதனால் அம்பயரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த புகார் மீதான பரிசீலனை ஐபிஎல் நிர்வாகிகள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டது. புகாரை விசாரித்த நிர்வாகிகள், ராஜஸ்தான் அணிமீது குற்றச்சாட்டை உறுதி செய்து, அந்த அணி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்தனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close